மகாராஷ்டிரா மாநிலம் தேம்பலி கிராமத்தை சேர்ந்த 10 ஆதிவாசிகளுக்கு நாட்டின் முதலாவது தனித் தன்மை அடையாள எண்கள் (Aadhar Number) இன்று வழங்கப் பட்டன. ரஞ்சனா சதாசிவ் சோன்வனே என்ற அக்கிராமத்து பழங்குடிபெண் தனித் தன்மை அடையாள எண் பெறும் முதலாவது இந்திய பிரஜை ஆனார்.
பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கரஸ் தலைவர் சோனியா காந்தியும் இந்த எண்கள் அடங்கிய இந்திய தனித்தன்மை அடையாள ஆணையம் தயாரித்துள்ள "ஆதார்" அட்டைகளை பழங்குடியின கிராமத்தின் மக்கள் 10 பேரிடம் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா ஆளுநர் கே சங்கரநாராயணன், முதலமைச்சர் அசோக் சவ்கான், திட்டக் குழுத் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, இந்திய தனித் தன்மை அடையாள ஆணையத்தின் (Unique Identification Authority of India - UIDAI) தலைவர் நந்தன் நிலக்கேணி ஆகியோர் பங்கேற்றனர்.
ஒவ்வொரு தனித் தன்மை அடையாள எண்ணும் 12 எண்கள் (12 digits) கொண்டதாக இருக்கும். படிப்படியாக இத்திட்டம் இந்தியா முழுவதும் கொண்டு செல்லபடவுள்ளது. அவ்வேளையில் ஒவ்வொருவரின் பத்து விரல்களின் கைரேகையும், கண் ரேகையும் பதிவு செய்யப்படும்.
|