கடந்த 23.09.2010 அன்று மாலை 06.00 மணியளவில், காயல்பட்டினம் ஓடக்கரை பகுதியில் நடந்த விபத்தில் காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் ஆசிரியர் கலீலுர்ரஹ்மான் பலியானார். அப்போது அவருடன் சென்று படுகாயமுற்ற அவரது மனைவி முஹ்யித்தீன் ஃபாத்திமா, மறுநாள் மருத்துவமனையில் காலமானார்.
இவ்விருவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, திருவனந்தபுரம் காயல் நல மன்றம் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் ஆசிரியர் கலீலுர்ரஹ்மான் அவர்கள் காலமானது மற்றும் அப்போது அவருடன் சென்று படுகாயமுற்ற அவரது மனைவி முஹ்யித்தீன் ஃபாத்திமா, மறுநாள் மருத்துவமனையில் காலமான செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தோம்.
கருணையுள்ள அல்லாஹ் அவ்விருவருக்கும் - அவனுக்காக உயிர்நீத்த ஷஹீத்களின் தரத்தையளித்து, மறுமையில் சுவனபதியிலும் தம்பதியாக வாழச் செய்வானாக, ஆமீன்.
அவர்கள் பெற்றடுத்த அன்புக் குழந்தைகள் இருவருக்கும் வல்ல ரஹ்மான் நல்ல பொறுமையையும், மனப்பக்குவத்தையும் தந்து, துயரங்களை நீக்கி, அவர்களின் வருங்கால வாழ்வை ஒளிமயமானதாக ஆக்கித் தருவானாக!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
திருவனந்தபுரம் காயல் நல மன்றம் சார்பாக,
ஜாஹிர் ஹுஸைன்,
திருவனந்தபுரம், கேரள மாநிலம். |