அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் செப்டம்பர் 24 அன்று தீர்ப்பு அளிக்க இருந்தது. ஆனால் இந்திய உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 23 அன்று வழங்கிய ஆணையில் இத்தீர்ப்பினை ஒரு வாரம் தள்ளி வைக்கும்படி அறிவித்திருந்தது.
மேலும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் கட்சிகாரர்களுக்கும், இந்திய அரசாங்க வக்கீலுக்கும் சமரச வாய்ப்பு குறித்து பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. உச்ச நீதிமன்றம் அடுத்து இவ்வழக்கினை இன்று (செப்டம்பர் 28) விசாரிக்கும் என்றும் அறிவித்திருந்தது.
இவ்வழக்கு இன்று காலை 10:30 மணி அளவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கோர்டில், தலைமை நீதிபதி எஸ்.ஹெச்.கபாடியா, நீதிபதிகள் அஃப்தாப் ஆலம் மற்றும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட மூவர் பென்ச் முன்பு முதல் வழக்காக விசாரணைக்கு வருகின்றது.
உச்ச நீதிமன்றம் - இவ்வழக்கில் சமரசத்திற்கு வாய்ப்பு உள்ளதா அல்லது உடனடியாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்க வேண்டுமா என இன்று முடிவு சொல்லும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
|