ஜம்இய்யத் அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் அமைப்பின் சார்பில் காயல்பட்டினத்தில் மீலாதுன் நபி விழா 21.09.2010 அன்று நடைபெற்றது. விழா நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
ஜம்இய்யத் அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், மீலாதுன் நபி விழா, காயல்பட்டினம் பெரிய சதுக்கை வளாகத்தில், 21.09.2010 அன்று இரவு நடைபெற்றது.
மௌலானா மௌலவி அஷ்ஷெய்கு முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி அவர்கள் தலைமை வகித்தார்கள். மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
சிறப்பு பேச்சாளர்களாக மௌலானா மௌலவி அல்ஹாபிழ் முஹம்மது காஸிம் மஹ்லரி (இமாம், ஏழுலெப்பை பள்ளி, நாகூர்), நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது நேசம் என்ற தலைப்பில் மௌலானா மௌலவி சையிது வஜீஹுன்னகீ சகாப் லதீபி ஷத்தாரி அவர்கள் நவீனவாதிகளின் விதண்டாவாதமும் சுன்னத்வல் ஜமாஅத்தினர்களின் தெளிவான ஆதாரங்களும் என்ற தலைப்பில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
இறுதியில் நேர்ச்சை பாத்திஹா துஆவுடன் மஜ்லிஸ் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
குளம் ஜமால் முஹம்மத்,
காயல்பட்டினம். |