காயல்பட்டினம் சுலைமான் வலிய்யுல்லாஹ் நற்பணி மன்றம் சார்பில், சத்தியப் பயணம் என்ற பெயரில் குறுந்தகடுகள் வெளியிடப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் மரைக்கார் பள்ளித்தெருவையொட்டி செயல்பட்டு வருகிறது சுலைமான் வலிய்யுல்லாஹ் நற்பணி மன்றம். மார்க்க சொற்பொழிவுகள், நூல் வெளியீடுகள், பொது நிகழ்ச்சிகள், குறுந்தகடு வெளியீடு, தஃவா எனும் அழைப்புப் பணிகள் உள்ளிட்ட பலவற்றைச் செய்து வருகிறது இம்மன்றம்.
மவ்லவீ என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் மஹ்ழரீ, மவ்லவீ சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, மவ்லவீ ஹாமித் பக்ரீ மன்பஈ, மவ்லவீ முஹம்மத் அலீ ஆலிம், அவ்லியா அப்துர்ரஷீத் மற்றும் பலர் ஆற்றிய உரைகள் அடங்கிய குறுந்தகடுகள் நேற்றிரவு (26.09.2010) காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் வெளியிடப்பட்டது.
நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் துணைத்தலைவர் மவ்லவீ டி.ஜே.எம்.ஸலாஹுத்தீன் ரியாஜீ இக்குறுந்தகடுகளை வெளியிட, ஹாஜி எம்.எம்.உவைஸ் அதனைப் பெற்றுக்கொண்டார்.
காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் ஹிஃப்ழுப் பிரிவு பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அப்துல்லாஹ் ஃபாஸீ, அல்அஸ்ரார் மாத இதழ் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டி.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ, மவ்லவீ சுலைமான் சேட், மவ்லவீ ஏ.அப்துர்ரஹ்மான் ஷிப்லீ மிஸ்பாஹீ ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.
இக்குறுந்தகடுகள் காயல்பட்டினம் கடைப்பள்ளி எதிரில் அமைந்துள்ள ஸாஜிதா புக் சென்டர் நிறுவனத்தில் கிடைக்கும் என சுலைமான் வலிய்யுல்லாஹ் நற்பணி மன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஜி குளம் M.I.மூஸா நெய்னா,
நிர்வாகி,
சுலைமான் வலிய்யுல்லாஹ் நற்பணி மன்றம்,
காயல்பட்டினம். |