கடந்த 23.09.2010 அன்று மாலை 06.00 மணியளவில், காயல்பட்டினம் ஓடக்கரை பகுதியில் நடந்த விபத்தில் காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் ஆசிரியர் கலீலுர்ரஹ்மான் பலியானார். அப்போது அவருடன் சென்று படுகாயமுற்ற அவரது மனைவி முஹ்யித்தீன் ஃபாத்திமா, மறுநாள் மருத்துவமனையில் காலமானார்.
இவ்விருவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் ஆசிரியர் கலீலுர்ரஹ்மான் பலியானது மற்றும் அப்போது அவருடன் சென்று படுகாயமுற்ற அவரது மனைவி முஹ்யித்தீன் ஃபாத்திமா, மறுநாள் மருத்துவமனையில் காலமான செய்தியறிந்து மிகுந்த கவலையடைந்தோம்.
எல்லாம்வல்ல அல்லாஹ் மர்ஹூம்கள் இருவரின் மீதும் அவனுடைய ரஹ்மத்தை வாரி வழங்கி, அவர்களின் பாவப் பிழைகளை மன்னித்துக் கிருபை செய்து, அவர்களுடைய கபுர்களைப் பிரகாசமாக்கி, மறு உலக வாழ்கையில் நம் கண்ணின் மணி நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் என்னும் மேலான பரிந்துரையை பெற்று அதனுடன் சுவனத்தில் நுழையச் செய்வானாக! ஆமீன்!
மேலும் உங்கள் யாவருக்கும் - குறிப்பாக அவர்கள் பெற்றடுத்த அன்புக் குழந்தைகள் இருவருக்கும் வல்ல ரஹ்மான் நல்ல பொறுமையை தந்து, நல்ல மனப் பக்குவத்தையும் தந்து, அவர்களின் துயரங்கள் நீக்கி வாழ்க்கையை என்றும் மிகவும் சந்தோஷமாகவும், செழிப்பாகவுமாக்கி அருள் புரிவானாக, ஆமீன்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) சார்பாக,
S.A.அஹ்மத் இர்ஃபான்,
பாங்காக், தாய்லாந்து. |