அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் சமரசத்திற்கு வாய்ப்பு உள்ளதா அல்லது உடனடியாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்க வேண்டுமா என்று குறித்த வழக்கு (SLP(C)No.27466-27467/2010) உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கோர்டில், தலைமை நீதிபதி எஸ்.ஹெச்.கபாடியா, நீதிபதிகள் அஃப்தாப் ஆலம் மற்றும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட மூவர் பென்ச் இவ்வழக்கினை இன்று காலை 10:30 மணி அளவில் முதல் வழக்காக விசாரித்தது.
வழக்கை தொடர்ந்திருந்த ரமேஷ் சந்திர திரிபாதி, மத்திய சுன்னி வக்ஃப் வாரியம் மற்றும் இந்திய அரசாங்கம் ஆகியோர் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் இவ்வழக்கத்தில் ஆஜராயினர்.
2.5 மணி நேர விவாதத்திற்கு பிறகு - 2 மணிக்கு மீண்டும் கூடிய உச்ச நீதிமன்றம் -அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை உடனடியாக வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது.
இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 23 அன்று - அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்க விதித்த இடைக்கால தடை நீங்குகிறது.
|