இவ்வாண்டு ஹஜ் பயண விமான தேதிகளில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதையும், அதனால் சஊதி அரபிய்யாவில் ஏற்படும் கூடுதல் செலவைக் காரணம் காட்டி இந்திய ஹஜ் குழு (HAJ COMMITTEE) பயண கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
உயர்த்தப்பட்ட கட்டணங்களை செலுத்தும் விதம் குறித்து ஹஜ் குழுவைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது அவர்கள் தெரிவித்ததாவது:-
ஒவ்வொரு பயணியின் விமான தேதி, புறப்படும் நேரம், விமான எண் உள்ளிட்ட விபரங்கள் அந்தந்த உறை எண்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அக்கடிதத்திலேயே கூடுதல் பயணக் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு விபரமும் இணைத்தனுப்பப்படும்.
அதில் தெரிவிக்கப்பட்ட முறைப்படி வங்கியில் கூடுதல் தொகையைச் செலுத்தி, அதற்கான செல்லானை மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். பணமாக செலுத்தக் கூடாது.
இவ்வாறு தமிழ்நாடு ஹஜ் குழு நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross