ஐக்கிய அரபு அமீரகம் துபையில் செயல்பட்டு வரும் அமீரக காயல் நல மன்றத்தின் மாதாந்திர செயற்குழுக் கூட்டம் 24.09.2010 வெள்ளிக்கிழமை மாலை 05.30 மணிக்கு, மன்றத் தலைவர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ இல்லத்தில், கத்தீப் செய்யித் இப்றாஹீம் தலைமையில் நடைபெற்றது.
ஹாஜி எம்.எஸ்.நூஹ் ஸாஹிப் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். தலைவர் உரையைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகர மேம்பாட்டிற்காக பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
தகவல்:
அமீரக காயல் நல மன்றம் சார்பாக,
நிஜாம்,
துபை, ஐக்கிய அரபு அமீரகம். |