காயல்பட்டினம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் மாணவியர் விடுதி புதிய கட்டிட திறப்பு விழா இன்று (24.09.2010) மாலை 05.00 மணிக்கு நடைபெற்றது.
யுனிட்டி பப்ளிக் கல்விக் குழுமத்தின் தலைவரும், ப்ரொஃபஷனல் கொரியர் நிறுவனத்தின் இயக்குனருமான அஹ்மத் மீரான் மாணவியர் விடுதி புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
பின்னர் நடைபெற்ற விழாவிற்கு, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளியின் செயலாளர் வழக்குறைஞர் ஹாஜி எம்.ஐ.மீராஸாஹிப் தலைமை தாங்கினார். அதன் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர் முன்னிலை வகித்தார். கல்லூரி தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கல்லூரி தலைவரின் தலைமையுரையைத் தொடர்ந்து, கல்லூரியின் முதல்வர் மவ்லவீ அப்துல் மஜீத் மஹ்ழரீ அறிமுகவுரையாற்றினார். பின்னர், சிறப்பு விருந்தினர் அஹ்மத் மீரான் வாழ்த்துரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, வழக்குறைஞர் ஹாஜி எம்.ஐ.மீராஸாஹிப் தலைமை உரையாற்றினார். தொடர்ந்து மதுரை மவ்லவீ பிஸ்மில்லாஹ் கான் ஃபைஜீயின் சிறப்புரைக்குப் பின், ஹாஜி எஸ்.இப்னு சஊத் நன்றியுரை கூற, கஃப்ஃபாராவுடன் விழா நிறைவுற்றது. தம்மாம் இஸ்மாயீல் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
இவ்விழாவில், காயல்பட்டினம் நகர பிரமுகர்களான இப்றாஹீம் மக்கீ, எஸ்.ஏ.ஃபாரூக், எஸ்.ஐ.புகாரீ, டி.ஏ.எஸ்.முஹம்மத் அபுபக்கர், நவாஸ் அஹ்மத், மூஸா ஹாஜி, எஸ்.எம்.அமானுல்லாஹ், ஆர்.அல்தாஃப், ஏ.கே.எம்.முஹம்மத் தம்பி, எல்.டி.சித்தீக், எம்.எம்.அஹ்மத் ஸாஹிப், ஹைதர் அலீ உட்பட ஏராளமான ஆண்களும், பெண்களும் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை எஸ்.எச்.லுத்பீ தலைமையில், எம்.ஏ.அப்துல் ஜப்பார், எஸ்.அப்துல் வாஹித் மற்றும் பலர் செய்திருந்தனர்.
படங்கள்:
M.M.அஹ்மத் ஸாஹிப்,
தைக்கா தெரு, காயல்பட்டினம். |