தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (23.09.2010) மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.பிரகாஷ் தலைமையில், ராம் ஜென்ம பூமி - பாபர் மசூதி வழக்கு தொடர்பான தீர்ப்பு நாளை (24.09.2010) வெளியிடப்படுவது குறித்து சட்டம் ஒழுங்கு தொடர்பாக முன்னேற்பாட்டுப் பணி கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், டி.ஐ.ஜி. கே.பி.சண்முகராஜேஸ்வரன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கபில்குமார் சி.சரத்கர், மாவட்ட வருவாய் அலுவலர் துரை இரவிச்சந்திரன், தூத்துக்குடி உதவி ஆட்சியர் சஞ்ஞன்சிங் ஆர்.சவான், திருச்செந்தூர், கோவில்பட்டி கோட்டாட்சியர்கள், காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள், மாவட்டத்தின் இந்து - முஸ்லிம் மத பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
வெளியீடு:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
தூத்துக்குடி.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இன்று மாலை இத்தீர்ப்பு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |