காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்டப் பிரிவின் (NSS) சார்பில், கிராம சீரமைப்பு சிறப்பு முகாம் துவக்க விழா, குலசேகரன்பட்டினம் அசனியா நடுநிலைப்பள்ளியில், 26.09.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 06.45 மணிக்கு நடைபெறுகிறது.
எல்.கே. பள்ளிகளின் நிர்வாகிகள், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், முகாம் துவக்க விழா நடைபெறும் குலசை அசனியா பள்ளியின் அங்கத்தினர் முன்னிலை வகிக்கும் இவ்விழாவில், குலசை காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.ஏசு ராஜசேகரன் முகாம் நிகழ்வுகளைத் துவக்கி வைக்கிறார்.
திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
பல்வேறு பள்ளிக்கூடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கவுள்ளனர்.
முகாம் ஏற்பாடுகளை, எல்.கே.மேனிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட ஏ.ஜே.முஸ்தஃபா தலைமையில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்து வருகின்றனர்.
தகவல்:
L.T.இப்றாஹீம்,
ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்,
எல்.கே.பள்ளிகள், காயல்பட்டினம். |