ஆன்-லைன் மூலம் (www.tnebnet.org/awp/TNEB) மின் கட்டணத்தை செலுத்தும் சென்னை, கோவை மண்டலங்களை தொடர்ந்து அடுத்த மாதம் முதல் (அக்டோபர்) தமிழ்கம் முழுவதும் இவ்வசதியை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மின்சார வாரிய தலைவர் சந்திரபிரகாஷ்சிங் கூறியுள்ளார்.
தமிழக மின்சார வாரியத்தை சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, வேலூர் விழுப்புரம், திருச்சி என்று 8 மணடலங்களாக பிரித்திருக்கிறோம். சென்னை, கோவை மண்டலங்களை தொடர்ந்து அடுத்த மாதம் முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மண்டலங்களுக்கும் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளோம். இதன் மூலம் மின் நுகர்வோர்கள் அனைவரும் மின்கட்டணத்தை ஆன்லைனிலேயே செலுத்திவிடலாம். பாரத் ஸ்டேட் வங்கி உள்பட இதர வங்கி வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வசதியை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு சந்திர பிரகாஷ் சிங் தெரிவித்துள்ளார். |