செய்தி எண் (ID #) 4812 | | |
வெள்ளி, செப்டம்பர் 24, 2010 |
ஓடக்கரை விபத்தில் படுகாயமுற்ற ஆசிரியரின் மனைவியும் மரணம்! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 5410 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (23) <> கருத்து பதிவு செய்ய |
|
நேற்று நடைபெற்ற ஓடக்கரை விபத்தில் பலியான ஆசிரியர் கலீலுர்ரஹ்மானின் மனைவி இன்று இரவு காலமானார்.
இதுகுறித்து, ஆசிரியர் கலீலுர்ரஹ்மான் பணிபுரிந்த காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் தாளாளர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம் தெரிவித்ததாவது:-
நேற்று (23.09.2010) மாலை 06.00 மணியளவில், காயல்பட்டினம் ஓடக்கரை பகுதியில் நடந்த விபத்தில் பலியான - காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் ஆசிரியர் கலீலுர்ரஹ்மானின் மனைவி முஹ்யித்தீன் ஃபாத்திமா, படுகாயமுற்ற நிலையில், திருநெல்வேலி கேலக்ஸி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நேற்று முதல் அவர் ஆபத்தான கட்டத்திலிருந்த அவருக்கு, தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையிலும், எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இன்றிரவு 07.15 மணிக்கு அவர் காலமானார். அவரது உடல் (ஜனாஸா) நல்லடக்கம், நாளை மதியம் லுஹர் தொழுகைக்குப் பின், அவரது சொந்த ஊரான பேட்டை பள்ளிவாசலில் நடைபெறும்.
அவர்களின் இரண்டு மக்களான, காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் ரஹ்மத் ஷமீமா, கமலாவதி மேனிலைப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மொகுதூம் ரியாஸ் ஆகியோருக்கு தற்போதுதான் தந்தையின் இறப்புச் செய்தி பக்குவமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயின் இறப்புச் செய்தியை நாளைதான் தெரிவிக்க முடியும்.
அவர்கள் இருவரும் தற்சமயம், அவர்களது தாயின் தாயாருடைய பொறுப்பில் உள்ளனர். நாளை நடைபெறும் தாயாரின் உடல் நல்லடக்கத்தில் கலந்துகொள்வதற்காக அவர்கள் பேட்டைக்குப் புறப்படவுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். |