கடந்த 23.09.2010 அன்று மாலை 06.00 மணியளவில், காயல்பட்டினம் ஓடக்கரை பகுதியில் நடந்த விபத்தில் பலியான - காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் ஆசிரியர் கலீலுர்ரஹ்மானின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, ஹாங்காங் கஸ்வா (KAYAL STUDENTS WELFARE ASSOCIATION – (KSWA) அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு:-
பிஸ்மில்லாஹ், வல்ஹம்துலில்லாஹ்> வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்...
நஹ்மதுஹு வனு ஸல்லி அலா ரசூலிஹில் கரீம்!
அன்பிற்கும், பாசத்திற்குமுரிய ஆசிரியர் கலீலுர்ரஹ்மான் அவர்களின் குழந்தைகள், குடும்பத்தார் அனைவர்களுக்கும், ஹாங்காங் கஸ்வா (KSWA - KAYAL STUDENTS WELFARE ASSOCIATION) அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரின் அகங்கனிந்த ஸலாம். அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!
மதிப்பிற்குரிய எங்கள் ஆசிரியர் அவர்களின் மரணச் செய்தியும், அன்னாரின் அன்பு மனைவியின் மரணச் செய்தியும் எங்கள் யாவரையும் மனம் கலங்கச் செய்துவிட்டது! இன்னா லில்லாஹி வ இன்னா இலாஹி ராஜிஊன்!
வல்ல ரஹ்மானின் நாட்டப்படி நடந்த இந்த துயரமான காரியத்திற்கு நாம் யாவரும் சபூர் என்னும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியது நம் மீது கடமையாக இருக்கிறது!
எல்லாம்வல்ல அல்லாஹ் மர்ஹூம்கள் இருவரின் மீதும் அவனுடைய ரஹ்மத்தை வாரி வழங்கி, அவர்களின் பாவப் பிழைகளை மன்னித்துக் கிருபை செய்து, அவர்களுடைய கபுர்களைப் பிரகாசமாக்கி, மறு உலக வாழ்கையில் நம் கண்ணின் மணி நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் என்னும் மேலான பரிந்துரையை பெற்று அதனுடன் சுவனத்தில் நுழைய செய்வானாக! ஆமீன்!
மேலும் உங்கள் யாவருக்கும் குறிப்பாக அவர்கள் பெற்றடுத்த அன்பு குழந்தைகள் இருவருக்கும் வல்ல ரஹ்மான் நல்ல பொறுமையை தந்து, நல்ல மன பக்குவத்தையும் தந்து, அவர்களின் துயரங்கள் நீக்கி வாழ்க்கையை என்றும் மிகவும் சந்தோஷமாகவும், செழிப்பாகவுமாக்கி அருள் புரிவானாக, ஆமீன்!
கண்ணியமிகு ஆசிரியர் கலீலுர்ரஹ்மான், மென்மையான மனதிற்கு சொந்தகாரர்... மாணவர்கள் மற்றும் உடன் வேலை புரியும் ஆசிரியர்களுடன் இனிமையான முறையில் பழகக்கூடியவர்... எளிய முறையில் பாடம் போதிக்ககூடியவர்... இப்புகழுக்குச் சொந்தக்காரர் நம் கண்ணை விட்டு மறைந்தது நம் யாவருக்கும் ஒரு பேரிழப்புதான் என்றால் அது மிகையாகாது! எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரங்கல் செய்தி, காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி தாளாளர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம் மூலமாக மர்ஹூம்களின் குடும்பத்தாரிடம் சேர்ப்பிக்கப்படவுள்ளதாக அந்த அமைப்பின் சார்பில் அறியத்தரப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஃபிழ் M.N.முஹ்யித்தீன்,
ஹாங்காங். |