சூரியனை சுற்றி வரும் 8 பெரிய கிரகங்களில் மிகவும் பெரியது வியாழன் (JUPITER) கிரகமாகும். இது பூமியைவிட 12 மடங்கு பெரியது.
சூரியனை பூமி சுற்றி வருவதை போல் வியாழன் உட்பட ஏனைய கிரகங்களும் சூரியனை சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றி வரும் போது சில சமயங்களில் பூமிக்கு மிக அருகில் அக்கிரகங்கள் வரும். அந்நிகிழ்வு செப்டம்பர் 20 அன்று வியாழன் கிரகத்துக்கு நடந்தது. அன்று பூமியிலிருந்து வியாழன் கிரகம் சுமார் 60 கோடி கிலோ மீட்டர் அருகில் இருந்தது. மேலும் நேற்று சூரியனுக்கு எதிர் திசையையும் (OPPOSITION) வியாழன் கிரகம் அடைந்தது.
1963 முதல் 2022 வரை இடைப்பட்ட காலத்தில் இதுவே வியாழன் கிரகம் பூமிக்கு மிக அருகில் வரும் தூரமாகும். ஆகவே வழக்கத்தை விட வியாழன் கிரகம் பூமியிலிருந்து மிக பிரகாசமாக தென்படும். செப்டம்பர் 20 அன்று இதனை காண தவறியவர்கள் மாதம் முழுவதும் ஏறத்தாழ அதே பிரகாசத்தில் வியாழன் கிரகத்தை காணலாம்.
சூரியனை சுற்றி வரும் 8 பெரிய கிரகங்களில் ஒன்றான யுரேனஸ் கிரகமும் சூரியனுக்கு எதிர் திசையை இன்று அடைகிறது. இன்று மாலை சூரியன் மேற்கு வானில் மறையும் போது, கிழக்கு வானில் சந்திரன் உதித்த சில நிமிடங்களில் வியாழன் கிரகமும், தொடர்ந்து யுரேனஸ் கிரகமும் உதிக்கும்.
வெறுங்கண்ணால்
வியாழன் கிரகத்தை காணலாம். யுரேனஸ் கிரகத்தை காண தொலைநோக்கிகள் தேவைப்படும். மேலும் வியாழன், யுரேனஸ் கிரகங்கள் ஒன்றுக்கு ஒன்று மிக அருகில் (CONJUNCTION) தென்படும்.
தகவல்:
காயல்பட்டணம் வானவியல் சங்கம்
|