காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியில், திருக்குர்ஆன் மனனப் பிரிவில் (ஹிஃப்ழுப் பிரிவு) சேரும் உள்ளுர் மாணவர்கள் கட்டாயம் விடுதியில் தங்க வேண்டும் என ஜாவியா பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூட்ட விபரங்கள் பின்வருமாறு:-
காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் நிர்வாக ஆலோசனைக் கூட்டம், 18.09.2010 அன்ற காலை 10 மணிக்கு, ஜாவியா துணைத்தலைவர் ஹாஜி எம்.எம்.நூஹ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - வரவு-செலவு கணக்கறிக்கைக்கு ஒப்புதல்:
கல்லூரியின் 2010ஆம் ஆண்டின் வரவு - செலவு கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதல் தெரிவித்தது.
தீர்மானம் 2 - நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல்:
2010-2011 பருவத்திற்கான கல்லூரியின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட்டு, கூட்டம் அதை ஒருமனதாக அங்கீகரித்தது.
தீர்மானம் 3 - உள்ளூர் மாணவர்களுக்கும் விடுதி கட்டாயம்:
ஜாவியா அரபிக்கல்லூரியில் நடத்தப்படும் 7 ஆண்டு பாடத்திட்டத்தைக் கொண்ட ‘ஆலிம் ஃபாஸீ‘ பிரிவும், திருக்குர்ஆன் மனன(ஹிஃப்ழு)ப் பிரிவும் வழமை போல தொடர்ந்து நடத்தப்படும் என்றும், இனி உள்ளூர் மாணவர்களும் கல்லூரி மாணவர் விடுதியில் தங்கியே பயில வேண்டும் எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 4 - அனுதாபத் தீர்மானம்:
கல்லூரியின் நிர்வாகத்திற்கு மிகவும் உறுதுணையாயிருந்த ஹாஜி ஏ.வி.எஸ்.அபுல் காஸிம் அவர்களின் மறைவுக்கு அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரின் பிழை பொறுப்புக்காக (மஃபிரத்) இக்கூட்டம் பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 5 - கந்தூரி ஏற்பாட்டுக் குழு:
ஜாவியாவில் வரும் ஆண்டு நடைபெறவுள்ள கந்தூரி நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதற்கு,
ஹாஜி எம்.எஸ்.முஹம்மத் ஸஈத் அவர்களைத் தலைவராகவும்,
ஹாஜி எம்.எல்.செய்யித் அஹ்மத் ஸாலிஹ் அவர்களை துணைத்தலைவராகவும்,
ஹாஜி எஸ்.டி.லபீப் அவர்களை செயலாளராகவும்,
ஹாஜி எம்.எம்.நூர் முஹம்மத் ஆலிம் அவர்களை துணைச் செயலாளராகவும்
கொண்ட கமிட்டி நியமனம் செய்யப்படுகிறது.
தீர்மானம் 6 - மத்ரஸா கண்காணிப்புக் குழு:
ஜாவியா அரபிக்கல்லூரியின் ஜும்றா மற்றும் ஹிஃப்ழு பிரிவுகளைத் தொடர்ச்சியாக கண்காணிப்பதற்கு,
ஹாஜி எஸ்.டி.புகாரீ,
ஹாஃபிழ் எம்.ஏ.புகாரீ,
ஹாஃபிழ் ஏ.எச்.முஹம்மத் நூஹ்,
மவ்லவீ ஹாஃபிழ் வி.எம்.ஏ.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ
ஆகியோரைக் கொண்ட கண்காணிப்புக் குழு நியமனம் செய்யப்படுகிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துஆ ஜலாலாவுடன் கூட்டம் நிறைவுற்றது.
|