காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரி வளாகத்தில் நேற்று காலை 10 மணிக்கு, தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள ஹாஜிகளுக்கான ஹஜ் வழிகாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஹஜ், உம்றா சம்பந்தப்பட்ட பாடங்களை அப்துர்ராஸிக் தஃலீமாக வாசித்தார். அதனைத் தொடர்ந்து, ஹஜ் பயண ஏற்பாடுகள், ஹஜ் - உம்றா கிரியைகள், ஜியாரத் செயல்பாடுகள் உள்ளிட்ட தலைப்புகளில் மவ்லவீ அப்துல் வதூத் ஃபாஸீ, மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எம்.அப்துல்லாஹ் மக்கீ காஷிஃபீ, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ ஆகியோர் உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் காயல்பட்டினம் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள ஆண் ஹாஜிகள் சுமார் இருபது பேரும், பெண் ஹாஜிகள் நாற்பது பேரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கிடையே அவர்களுக்கு தேனீர் - சிற்றுண்டியும், நிகழ்ச்சி நிறைவில் மதிய உணவு விருந்து உபசரிப்பும் நடைபெற்றது.
|