நெல்லை முஸ்லிம் அனாதை நிலைய கமிட்டி (Muslim Orphanage Committee - MOC) தலைவர் ஹாஜி எம்.ஜமால் முஹம்மத் ஸாஹிப் இன்று காலையில் காலமானார்.
“மேடை முதலாளி” என்றழைக்கப்பட்ட காலஞ்சென்ற மூனா ஆனா முஹம்மத் ஸாஹிப் அவர்களின் மகனும், திருநெல்வேலி முஸ்லிம் அனாதை நிலைய கமிட்டியின் தலைவருமான ஹாஜி எம்.ஜமால் முஹம்மத் ஸாஹிப், இன்று காலை 11.30 மணியளவில், திருநெல்வேலியில் காலமானார்.
அவரது ஜனாஸா நல்லடக்கம், நாளை (19.09.2010) மாலை 04.30 மணிக்கு, தென்காசி காட்டு பாவா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெல்லை மாவட்ட செயலாளர்
எல்.கே.எஸ். மீரான் முஹைதீன்
மூலமாக,
முதுவை ஹிதாயத்,
துபை, ஐக்கிய அரபு அமீரகம். |