தூத்துக்குடி மாவட்டத்திற்கான, புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் வெளியிட்டார். மாவட்டம் முழுவதும் உள்ள 6 சட்டசபை தொகுதிக்குட்பட்டு 10 லட்சத்து 47 ஆயிரத்து 550 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 5 லட்சத்து 17 ஆயிரத்து 543 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 30 ஆயிரத்து 007 பெண் வாக்காளர்களும் உள்ளனர். புதிதாக 69 ஆயிரத்து 482 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2010 சுருக்கத்திருத்த முறைக்கு பின் புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை திருச்செந்தூர் ஆர்டிஒ அலுவலகத்தில் வைத்து ஆட்சியர் பிரகாஷ் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளில் 2010 சுருக்கதிருத்த முறைக்கு முன்பு 9 லட்சத்து 78 ஆயிரத்து 190 வாக்காளர்கள் உள்ளனர். 4 லட்சத்து 82 ஆயிரத்து 374 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 95 ஆயிரத்து 816 பெண் வாக்காளர்களும் இருந்தனர்.
தற்போது சுருக்கதிருத்த முறைக்கு பின் இம்மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிக்குட்பட்டு 10 லட்சத்து 47 ஆயிரத்து 550 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 5 லட்சத்து 17 ஆயிரத்து 543 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 30 ஆயிரத்து 007 பெண் வாக்காளர்களும் உள்ளனர். இதில் 69 ஆயிரத்து 482 வாக்காளர்கள் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
89 ஆயிரத்து 255 வாக்காளர் பெயர் சேர்க்க கோரிய படிவம் 6 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 69 ஆயிரத்து 482 மனுக்கள் ஏற்கப்பட்டன. 19,773 மனுக்கள் பல்வேறு காரணங்களுக்கு நிராகரிக்கப்பட்டன. பெயரை நீக்க கோரிய படிவம் 7இல் 157 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 122 மனுக்கள் ஏற்கப்பட்டன. 35 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. படிவம் 8இல் 2011 மனுக்கள் பெறப்பட்டன. அனைத்து மனுக்களும் ஏற்கப்பட்டன. இதில் படிவம் 8ஏ-இல் 728 மனுக்கள் பெறப்பட்டன. இதில் அனைத்து மனுக்களும் ஏற்கப்பட்டன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஆர்டிஒ பாக்கியம் தேவ கிருபை, தாசில்தார் இளங்கோ, ஆர்டிஒ நேர்முக உதவியாளர் பாலசுப்பிரமணியன், தேர்தல் துணை தாசில்தார் செந்தூர்ராஜன், திருச்செந்தூர் வருவாய் ஆய்வாளர் கோபால், விஏஒ பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி தொகுதியில் அதிகபட்ச வாக்காளர்களும், ஓட்டபிடாரம் தொகுதியில் குறைந்த வாக்காளர்களும் உள்ளனர்.
விளாத்திகுளம் தொகுதியில் 83822 ஆண் வாக்காளர்களும், 84610 பெண் வாக்காளர்களும் மொத்தம் 168432 வாக்காளர்களும் உள்ளனர்.
தூத்துக்குடி தொகுதியில் 100849 ஆண் வாக்காளர்களும், 100726 பெண் வாக்காளர்களும் மொத்தம் 201575 வாக்காளர்கள் உள்ளனர்.
திருச்செந்தூர் தொகுதியில் 87937 ஆண் வாக்காளர்களும், 93412 பெண் வாக்காளர்களும், மொத்தம் 181349 வாக்காளர்கள் உள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 81452 ஆண் வாக்காளர்களும், 86864 பெண் வாக்காளர்களும், மொத்தம் 168316 வாக்காளர்கள் உள்ளனர்.
ஓட்டபிடாரம் தொகுதியில் 78439 ஆண் வாக்காளர்களும், 77955 பெண் வாக்காளர்களும் மொத்தம் 156394 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவில்பட்டி தொகுதியில் 85044 ஆண் வாக்காளர்களும், 86440 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மொத்தம் இம்மாவட்டத்தில் 10 லட்சத்து 47 ஆயிரத்து 550 வாக்காளர்கள் உள்ளனர்.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன் |