அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க.) கட்சியின் காயல்பட்டினம் கிளை சார்பில், பேரறிஞர் அண்ணா 102ஆவது பிறந்தநாள் விழா, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நேற்று (17.09.2010) இரவு 7 மணிக்கு நடைபெற்றது.
நகர ஜெ.பேரவை செயலாளர் ஹாஜி எல்.எஸ்.அன்வர் தலைமை தாங்கினார். அதிமுக திருச்செந்தூர் ஒன்றிய கழக செயலாளர் மு.இராமச்சந்திரன் வரவேற்றுப் பேசினார்.
அதிமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பள்ளத்தூர் முருகேசன், தலைமைக்கழக பேச்சாளர் சோலை இரா.கண்ணன், ம.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் காயல் அமானுல்லாஹ் மற்றும் பலர் சிறப்புரையாற்றினர்.
காயல்பட்டினம் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்ட இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை, நகர அண்ணா தொழிற்சங்க அமைப்பாளர் பி.மதியழகன், அதிமுக நகர செயலாளர் எஸ்.எம்.செய்யது காஸிம், எம்.ஜே.செய்யித் இப்றாஹீம், பி மனோகரன், கே.ஏ.எஸ்.அப்துல் காதர், ஹாஜி குளம் எம்.ஐ.மூஸா நெய்னா, எம்.சமுத்திரகனி, ஹாஜி எம்.எஸ்.எம்.சம்சுத்தீன், என்.எம்.அஹ்மத், என்.எஸ்.நெய்னா முஹம்மத் உள்ளிட்ட ஒன்றிய, நகர கட்சி நிர்வாகிகள் இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
|