நேற்றிரவு (20.09.2010) 7.30 மணியளவில், காயல்பட்டினம் சொளுக்கார் தெருவின் நடுப்பகுதியிலுள்ள மின் கம்பத்திலிருந்து கம்பி வடம் ஒன்று (main supply wire) திடீரென அறுந்து விழுந்தது.
இதனையறிந்த அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் உடனடியாக காயல்பட்டினம் மின்சார வாரிய அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்ததையடுத்து, அங்குள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அப்பகுதியில் மின் வினியோகத்தைத் துண்டித்து, சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
எந்நேரமும் அதிகளவில் சிறு குழந்தைகள் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும் அப்பகுதியில் அந்நேரத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் இருக்கவில்லை. அறுந்து விழுந்த கம்பி வடம் தரையில் விழாமல், அருகிலிருந்த ஒரு வீட்டின் கோட்டையில் நின்றுகொண்டிருந்த மரத்தின் மீது விழுந்ததாலும், பொதுமக்களோ, சிறு குழந்தைகளோ அந்நேரத்தில் அங்கில்லாமற்போனதாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இச்சம்பவம் காரணமாக அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
|