காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கவனத்திற்காக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வேண்டுகோள் அறிக்கை பின்வருமாறு:-
அன்பாளர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நமது முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, பாரம்பரியமிக்க - இயற்கையான சுற்றுச்சூழல் நிறைந்த கல்விக் கூடமாகும்.
நமது பள்ளியின் மாணவ-மாணவியரை அழைத்துச் செல்லும் வாகனம் மிகவும் பழையதாக உள்ளது. அத்துடன், மாணவியர் எண்ணிக்கைக்கேற்ப இடவசதியற்ற இடநெருக்கடி கொண்டதாக உள்ளது.
இக்குறையைப் போக்கும் வகையில், நம் பள்ளிக்கென 24 + 1 இருக்கைகள் கொண்ட SWARAJ MAZDA வாகனம் வாங்குவதென தீர்மானிக்கப்பட்டு, அதற்கான முன்பணமும் கொடுக்கப்பட்டுள்ளது.
Tax, Insurance உட்பட இந்த வாகனத்தை வாங்க ரூபாய் 9,75,000/- தொகை தேவைப்படுகிறது. இந்த வகைக்காக, நம் பள்ளியின் கண்ணியமிக்க நிர்வாகிகளும், பள்ளியின் மீது அக்கறையும், ஆர்வமும் கொண்ட முன்னாள் மாணவர்களும், ஆதரவாளர்களும் தத்தம் தகுதிக்கேற்ப நன்கொடைகள் தந்துகொண்டிருக்கிறார்கள்.
எனினும் தேவைப்படும் முழுத்தொகையும் இன்னும் பெறப்படாததால் இந்த அறிக்கையை அவசரமாக தங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.
எனவே, இச்செய்தியைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற - இது விஷயத்தில் ஆர்வப்படும் அன்பர்கள், கீழ்க்காணும் பள்ளியின் வங்கிக் கணக்கிற்கு தமது நன்கொடைகளை அனுப்பித் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்:-
Bank Account Details:
(1)
MUHYIDDEEN MATRICULATION HR. SEC. SCHOOL
I.O.B. - KAYALPATNAM. A/C NO. 6225
IFSC CODE: IOB A 0000491
(2)
MOHIDEEN MATRICULATION SCHOOL
ICICI – KAYALPATNAM
A/C NO. 61530 100 88 31
IFSC CODE: ICIC 0006153
நன்கொடை அனுப்புவோர், தாங்கள் தொகை அனுப்பிய விபரத்தை தயவுசெய்து நம் பள்ளியின் மேலாளர் கே.எம்.டி.சுலைமான் அவர்களின் kmt_sulaiman@yahoo.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது +91 93603 44087, +91 94866 55338 என்ற கைபேசி எண்களிலோ உடனடியாகத் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இச்செய்தியின் அடியில் உள்ள Comments பகுதியில் உங்கள் அடையாளத்துடன் விருப்பத்தைத் தெரிவித்தாலும், நாங்கள் உங்களை நேரடியாகத் தொடர்புகொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கே.எம்.டி.சுலைமான்,
மேலாளர்,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி,
காயல்பட்டினம். |