தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா மேனிலைப்பள்ளி சார்பில் 16.07.2010 அன்று நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான போட்டிகளில் காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவியர் சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர்.
உயர்நிலைப்பள்ளிகளுக்கான மெஹந்தி போட்டியில் எல்.கே.மெட்ரிகுலேஷன் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவியர் எம்.ஏ.ஜொஹரா வாஸியா, எஸ்.ஏ.அஹ்மத் முஜாஹிதா ஆகியோர் முதலிடத்தையும், ஆறாம் வகுப்பு மாணவி டி.எம்.எஸ்.ஓ.காபா நாஜியா இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
நடுநிலைப்பள்ளியளவில் நடத்தப்பட்ட பாட்டுப் போட்டியில் அப்பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவி டி.எம்.எஸ்.ஓ.காபா நாஜியா இரண்டாமிடம் பெற்றுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 20, 21 தேதிகளில், தூத்துக்குடி ஹோலி க்ராஸ் ஆங்கிலோ இந்தியன் மேனிலைப்பள்ளி சார்பில் நடத்தப்பட்ட பள்ளிகளுக்கிடையேயான இலக்கிய – கலாச்சார சங்கமம் நிகழ்ச்சியின்போது நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவியர் சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர்.
Spell Bee போட்டியில் அப்பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவி எஸ்.எம்.மர்யம் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளார்.
பட்டம் செய்யும் போட்டியில் (Kite Making) அப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவியர் எஸ்.ஜே.அனிஷா விர்ஜின் மேரி, பி.எச்.எம்.பர்வீன் ஆகியோர் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளனர்.
Skit போட்டியில், அப்பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவியர் எஸ்.எச்.ஜென்னத் முஃமினா, ஏ.எஸ்.அஹ்மத் முன்ஷிரா, எம்.எஸ்.ஃபாத்திமா முனவ்வரா ஆகியோர் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.
06.09.2010 அன்று திருச்செந்தூர் எல்.ஐ.சி. வளாகத்தில் நடத்தப்பட்ட, படத்திற்கு வண்ணம் தீட்டும் போட்டியில், எல்.கே.மெட்ரிகுலேஷன் பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவி கே.ஆயிஷா மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
Solo Singing போட்டியில், அப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி எம்.எஸ்.ஹவ்வா நவ்ரீன் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.
சாதனை மாணவியரை பள்ளியின் நிர்வாகிகள், தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர். |