தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் (தே.மு.தி.க.) கட்சியின் காயல்பட்டினம் கிளை சார்பில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் 15.09.2010 அன்று இரவு 7 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அக்கட்சியின் நகரச் செயலாளர் எம்.எச்.எம்.சதக்த்துல்லாஹ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோமதி கணேசன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் எஸ்.ஏ.செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்ட்ரிங் முருகன் வரவேற்றுப் பேசினார்.
மாநில கொள்கை பரப்புச்செயலாளர் வி.சி.சந்திரகுமார், மாநில கலை இலக்கிய அணி துணைச் செயலாளர் எம்.வி.எஸ்.இராஜேந்திரநாத், மாநில மீனவரணி துணைச் செயலாளர் ஜி.வி.பீட்டர்ராஜ் ஆகியோர் உரையாற்றினர்.
மாவட்டப் பிரதிநிதி டாக்டர் என்.அப்துல் ஹக் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின்போது, ஏழை ஒருவருக்கு மாவு அரைக்கும் அரவை இயந்திரம் உதவிப் பொருளாக வழங்கப்பட்டது. கூட்ட ஏற்பாடுகளை நகர தேமுதிக நிர்வாகிகள் செய்திருந்தனர். |