சஊதி அரபிய்யா தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில், வரும் 19.09.2010 அன்று மஞ்சள் காமாலை தடுப்பூசி இலவச முகாம் நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில், இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 19.09.2010 ஞாயிற்றக்கிழமையன்று காலை 09.00 மணி முதல், 12.30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரையிலும் மஞ்சள் காமாலை (Hepatitis B) தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது.
காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, கே.டி.எம். தெருவிலிருக்கும் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) ஆகிய இடங்களில் மேற்குறிப்பிடப்பட்ட நேரத்தில் இத்தடுப்பூசி முகாம் இலவசமாக நடத்தப்படவுள்ளது.
பிறந்த குழந்தை முதல் 15 வயது வரையுள்ள சிறுவர்-சிறுமியர் வரை இத்தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பை அவசியம் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதோடு, ஏற்கனவே ஐந்து வருடங்களுக்கு முன்பு இத்தடுப்பூசி போட்டுக்கொண்ட 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மீண்டும் (பூஸ்டர்) போட்டுக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
தம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட விருப்பமுள்ளவர்கள்,
+91 78454 21382
+91 95668 41354
ஆகிய கைபேசி எண்களில் முற்கூட்டியே தொடர்புகொண்டு பெயர் பதிவு செய்துகொள்ளலாம். இயலாதவர்கள் முகாமின்போது, நேரில் வந்தும் பெயர் பதிவு செய்து, தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
இச்செய்தியைப் பார்த்துக்கொண்டிருக்கும் வெளிநாட்டு - வெளியூர் காயலர்கள் தமது இல்லங்களுக்கு இன்றே தகவல் தெரிவித்து, இவ்வரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முகாம் குறித்து, காயல்பட்டினம் நகரில் டிஜிட்டல் பதாகைகள், டி.வி. விளம்பரங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு வருகிறது.
தகவல்:
தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பாக,
ஹஸன்,
தம்மாம், சஊதி அரபிய்யா. |