நோன்புப் பெருநாளை முன்னிட்டு சிங்கப்பூரில் பெருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
சிங்கப்பூர் சுல்தான் பள்ளியில் 12.09.2010 அன்று இரவு 08.30 மணிக்கு நடைபெற்ற அக்கருத்தரங்கில், கடந்த ரமழானில் அறிந்துகொண்ட நல்லவற்றை பிற நாட்களில் செயல்படுத்துவதெப்படி என்ற தலைப்பில் கருத்துப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டன.
தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை தலைவர் மவ்லவீ ஷெய்க் அப்துல்லாஹ் ஜமாலீ, சிங்கப்பூர் மஸ்ஜித் அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் உமர் ரிழ்வானுல்லாஹ், சிங்கப்பூர் மஸ்ஜித் சுலியா பள்ளியின் இமாம்களான மவ்லவீ ஸலீம் ஜமாலீ, மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ, சிங்கப்பூர் மஸ்ஜித் அல்அப்ரார் பள்ளியின் இமாம் மவ்லவீ மில்லத் இஸ்மாஈல் ஆகியோர் இக்கருத்தரங்கில் சிறப்புரையாற்றினர்.
காயலர்கள் உட்பட திரளானோர் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர். இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தகவல்:
V.M.M.முஹம்மத் அப்துல்லாஹ்,
சிங்கப்பூர். |