காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் பள்ளிக்கூடம் மற்றும் மத்ரஸா மாணவர்கள் பங்கேற்கும் பல்சுவை இஸ்லாமிய போட்டிகள் நேற்று நடைபெற்றது.
நேற்று காலை, மாலை, இரவு என மூன்று அமர்வுகளாக நடைபெற்ற இப்போட்டிகளுக்கு, ஐ.ஐ.எம். தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர், அதன் செயலாளர் வழக்குறைஞர் ஹாஜி எம்.ஐ.மீராஸாஹிப் ஆகியோர் முறையே தலைமை வகித்தனர். எஸ்.எச்.ஷமீமுல் இஸ்லாம் (எஸ்.கே.எஸ்.) அறிமுகவுரையாற்றினார்.
திருக்குர்ஆன் மனனம், கிராஅத், அதான், பேச்சு, திக்ர்-துஆக்கள் ஆகிய போட்டிகள் மாணவர்களின் வயது அடிப்படையில் இரண்டு பிரிவுகளாகவும், வினாடி-வினா போட்டி ஒரு பிரிவாகவும் நடத்தப்பட்டது.
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ, ஹாஃபிழ் எம்.என்.புகாரீ, ஹாஃபிழ் எம்,ஏ.முஹம்மத் ஃபாயிஸ், ஹாஃபிழ் செய்யித் முஹம்மத், ஏ.எஸ்.நெய்னா முஹம்மத், ஹாஜி எஸ்.முத்து அஹ்மத், எஸ்.எச்.ஷமீமுல் இஸ்லாம் (எஸ்.கே.எஸ்.), ஜப்பான் முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோர் இப்போட்டிகளில் நடுவர்களாகப் பங்கேற்றனர்.
இப்போட்டியில் காயல்பட்டினத்தின் பள்ளிக்கூடங்கள் மற்றும் மத்ரஸாக்களைச் சார்ந்த சுமார் 300 மாணவர்கள் பங்கேற்றனர்.
தம்மாம் இஸ்மாஈல் போட்டிகளை ஒருங்கிணைத்தார். பொதுமக்கள் போட்டிகளை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
போட்டியில் வென்ற மாணவர்களுக்கு, இன்றிரவு 08.00 மணிக்கு, கத்தீப் மவ்லவீ அப்துல் மஜீத் மஹ்ழரீயின் சிறப்புரையைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
கே.எம்.ஷபீர் அலீ, எம்.ஏ.அப்துல் ஜப்பார், எஸ்.அப்துல் வாஹித், எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத் மற்றும் பலர் இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
போட்டி நிகழ்வுகள் அனைத்தும் காயல்பட்டினம் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையான ஐ.ஐ.எம். டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தகவல்:
எம்.ஏ.அப்துல் ஜப்பார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
படங்கள்
எஸ்.எச்.ஷமீமுல் இஸ்லாம் எம்.ஏ., எம்.ஃபில்.
எல்.கே.காலனி, காயல்பட்டினம். |