கடந்த ரமழான் மாதத்தில், காயல்பட்டினம் அப்பாபள்ளிவாசலில் தினமும் நடைபெற்ற இரவுத்தொழுகையை வழிநடத்திய, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் திருக்குர்ஆன் மனனப் பிரிவு மாணவர்களுக்கு அப்பாபள்ளி நிர்வாகம் சார்பில் ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சி, 08.09.2010 அன்று மாலை 04.15 மணிக்கு பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைவர் ஹாஜி எம்.எஸ்.கே.எஸ்.மரைக்கார் என்ற சி.எம்.கே. தலைமை தாங்கினார். நெய்னா மரைக்கார் முன்னிலை வகித்தார். வழக்குறைஞர் மீராஸாஹிப் மாணவர்களை வாழ்த்திப் பேசினார்.


பின்னர், கடந்த ரமழான் மாதத்தில், காயல்பட்டினம் அப்பாபள்ளிவாசலில் தினமும் நடைபெற்ற இரவுத்தொழுகையை வழிநடத்திய, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் திருக்குர்ஆன் மனனப் பிரிவைச் சார்ந்த 23 மாணவர்களுக்கு ஊக்கப்பரிசுகள் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.


ஜப்பான் சுலைமான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பள்ளி ஜமாஅத்தார் இந்நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொண்டனர்.
 |