நோன்புப் பெருநாளை முன்னிட்டு, 10.09.2010 அன்று, காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளிவாசலில் காலை 09.30 மணிக்கு பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது.
தொழுகை மற்றும் குத்பா பேருரையை, பள்ளியின் கத்தீபும், காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வரும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் ஃபாஸீ நடத்தினார்.
பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்தார் இத்தொழுகையில் திரளாக்க் கலந்துகொண்டனர்.
குத்பா நிறைவுற்றதும், அனைவரும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
|