ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் உள்ளிட்ட வட இந்திய நகரங்களில் 11.09.2010 அன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.
ஜெய்ப்பூரில் காயல்பட்டினம் வழமைப்படி பெருநாள் தொழுகை காலை 09.00 மணிக்கு நடத்தப்பட்டது. மவ்லவீ ஹாஃபிழ் அபுல்ஹஸன் மஷீஷ் தொழுகை நடத்தி, குத்பா பேருரையாற்றினார்.
காயல்பட்டினத்தைச் சார்ந்த சுமார் 60 பேர் இத்தொழுகையில் கலந்துகொண்டனர். தொழுகை நிறைவுற்ற பின் அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
தகவல்
M.I.மொகுதூம் முஹம்மத்,
செயற்குழு உறுப்பினர்,
ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா),
ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம். |