‘‘தலைப்பிறை பிறந்துவிட்டாலே அது முதல்பிறைதான்... அது நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், கணக்கிட்டு அதன்படி அமல் செய்யலாம்‘‘ என்ற கருத்தைக் கொண்டுள்ள ஹிஜ்ரா கமிட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் காயல்பட்டினம் கிளையினர் 09.09.2010 அன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடினர்.
அன்று காலை 07.30 மணிக்கு காயல்பட்டினம் கடற்கரையில் அவர்கள் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர் ரஹ்மான் தொழுகையை வழிநடத்தினார்.
இத்தொழுகையில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஏ.ஃபாரூக், எஸ்.எம்.எஸ்.செய்யித் அஹ்மத் (எல்.கே.எஸ்.), கே.அப்துல் ஜலீல்> செய்யித் அஹ்மத் ரமழீ, எஸ்.அப்துல் வாஹித், எஸ்.முத்து அஹ்மத் உள்ளிட்ட ஆண்களும், பெண்களும் என சுமார் 60 பேர் கலந்துகொண்டனர்.
தகவல்:
எஸ்.அப்துல் வாஹித்,
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |