காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் பள்ளிக்கூடம் மற்றும் மத்ரஸா மாணவர்கள் பங்கேற்கும் பல்சுவை இஸ்லாமிய போட்டிகள் நேற்று முன்தினம் (12.09.2010) காலை முதல் இரவு 11 மணி வரை நடைபெற்றது.
திருக்குர்ஆன் மனனம், கிராஅத், அதான், பேச்சு, திக்ர்-துஆக்கள் ஆகிய போட்டிகள் மாணவர்களின் வயது அடிப்படையில் இரண்டு பிரிவுகளாகவும், வினாடி-வினா போட்டி மட்டும் ஒரு பிரிவாகவும் நடத்தப்பட்டது.
போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு மறுநாள் இரவு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், நேற்றிரவு (13.09.2010) இஷா தொழுகைக்குப் பின் பரிசளிப்பு நிகழ்ச்சி, பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர் தலைமையில் நடைபெற்றது. தம்மாம் இஸ்மாஈல் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.
துவக்கமாக, பள்ளியின் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ உரையாற்றினார். மாணவர்களுக்கு மார்க்கக் கல்வி அளிக்கப்பட வேண்டியதன் அவசியம், மார்க்கக் கல்வியில்லாத மாணவர்களின் அச்சமூட்டும் போக்குகள், இதனால் பெற்றோர் மற்றும் சமுதாயம் சந்திக்கும் அவலங்கள் குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
பின்னர் பரிசளிப்பு நிகழ்ச்சி துவங்கியது. அனைத்துப் போட்டிகளிலும் முதல் மூன்றிடங்களைப் பெற்றவர்களுக்கு வெற்றிப் பரிசுகளும், போட்டிகளில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஊக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன.
போட்டிகளில் முதல் மூன்று பரிசுகளை வென்றோர் பட்டியல் பின்வருமாறு:-
கிராஅத் போட்டி பிரிவு 1 (12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கானது):
1) செய்யித் அஹ்மத் (தீவுத்தெரு)
2) எம்.ஏ.முஹம்மத் நூஹ் (மகுதூம் தெரு)
3) எஸ்.எச்.முஹ்யித்தீன் ஸாஹிப் (அப்பாபள்ளி தெரு)
கிராஅத் போட்டி பிரிவு 2 (ஹாஃபிழ்கள் & ஹிஃப்ழ் மாணவர்களுக்கானது):
1) ஏ.எச்.எம்.செய்யித் முஹம்மத் ஃபஹத் (சொளுக்கார் தெரு)
2) ஜாஸிம் (கொச்சியார் தெரு)
3) கே.எம்.இம்தியாஸ் அஹ்மத் (கே.டி.எம். தெரு)
திருக்குர்ஆன் மனனப்போட்டி பிரிவு 1 (05ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கானது):
1) ஏ.அமீர் அப்பாஸ் (தஃவா சென்டர்)
2) கே.எஸ்.எல்.அபூபக்கர் தைய்யிப்
3) ஐ.ஷேக் ரய்யான்
திருக்குர்ஆன் மனனப்போட்டி பிரிவு 2 (06 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கானது):
1) முஹ்யித்தீன் அரஃபாத்
2) ஹசன் நுஃபைஸ்
3) செய்யித் அஹ்மத்
அதான் போட்டி பிரிவு 1 (ஹாஃபிழ்கள் & ஹிஃப்ழ் மாணவர்களுக்கானது):
1) ஜாஸிம் (கொச்சியார் தெரு)
2) கே.எம்.இம்தியாஸ் அஹ்மத் (கி.மு.கச்சேரி தெரு)
3) பி.எம். செய்யித் இஸ்ஹாக் (கே.டி.எம். தெரு)
அதான் போட்டி பிரிவு 2 (12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கானது):
1) செய்யித் அஹ்மத் (தீவுத்தெரு)
2) ஏ.அமீர் அப்பாஸ் (தஃவா சென்டர்)
3) ஏ.எச்.செய்யித் முஹம்மத் ஃபஹத் (சொளுக்கார் தெரு)
பேச்சுப் போட்டி பிரிவு 1 (5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கானது):
1) நூஹ் ஸப்ரீ (தீவுத்தெரு)
2) எஸ்.ஏ.என். முஹம்மத் அலீ
3) ஈஸா (காயிதெமில்லத் நகர்)
பேச்சுப்போட்டி பிரிவு 2 (06 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கானது):
1) செய்யித் அஹ்மத் (தீவுத்தெரு)
2) பீ.எம்.செய்யித் இஸ்மாஈல் (கே.டி.எம். தெரு)
3) பாஸிம் (தைக்கா தெரு)
3) எம்.எஃப்.முஆத் (சொளுக்கார் தெரு)
திக்ருகள் மற்றும் துஆக்கள் போட்டி பிரிவு 1 (ஹிஃப்ழ் & 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கானது):
1) செய்யித் அஹ்மத்
2) ரய்யான்
3) ஐதுரூஸ் ஃபைஸல்
திக்ருகள் மற்றும் துஆக்கள் போட்டி பிரிவு 1 (அனைவருக்குமானது - Open to All):
1) ஹாஜி எம்.என்.எம்.ஐ.மக்கீ (குத்துக்கல் தெரு)
2) அர்ஷத் (தஃவா சென்டர்)
3) சுலைமான் (தஃவா சென்டர்)
4) ஸாதிக் ஹஸன் (அப்பாபள்ளித் தெரு)
5) எஸ்.முத்து அஹ்மத் (மரைக்கார்பள்ளித் தெரு)
6) ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் (அலியார் தெரு)
7) டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் (ஹாஜியப்பா தைக்கா தெரு)
வினாடி - வினா போட்டி (ஒரே பிரிவு):
முதல் பரிசு பெற்ற அணியினர்:
1) ஹசன் நுஃபைஸ் (தீவுத்தெரு)
2) செய்யித் அஹ்மத் (தீவுத்தெரு)
3) எஸ்.ஏ.கே.ஐதுரூஸ் ஃபைஸல் (கே.டி.எம். தெரு)
4) ஸல்மான் (தஃவா சென்டர்)
இரண்டாம் பரிசு பெற்ற அணியினர்:
1) ஸுஹைல் (தைக்கா தெரு)
2) அப்துல் பாஸித் ( கே.டி.எம். தெரு)
3) அமீர் அப்பாஸ் ( தஃவா சென்டர்)
4) எம்.எஃப்.முஹம்மத் ஃபஹீம்.
சிறப்பு பரிசுகள்:
1) எம்.என்.எம்.ஐ.மக்கீ (ஆர்வமுள்ள பெரியவர் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது.)
2) செய்யித் அஹ்மத் (6 போட்டிகளில் பரிசுகளை வென்றதற்காக வழங்கப்பட்டது.)
பரிசுகளை அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர், செயற்குழு உறுப்பினர்கள் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, வழக்குறைஞர் ஹாஜி எம்.ஐ.மீராஸாஹிப், பொறியாளர் ஹாஜி ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் ஃபாரூக், தம்மாம் காயல் நற்பணி மன்ற செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் ரஃபீக், பொறியாளர் எம்.ஐ.அப்துல்லாஹ் மரைக்கார், ஹாங்காங் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால், கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ, ஹாஜி எஸ்.எம்.அமானுல்லாஹ் ஆகியோர் வழங்கினர்.
ஹாஃபிழ் எம்.ஏ.முஹம்மத் ஃபாயிஸ் நன்றி கூற, கஃப்ஃபாரா துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
கே.எம்.ஷபீர் அலீ, எம்.ஏ.அப்துல் ஜப்பார், எஸ்.அப்துல் வாஹித், எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத், ஜப்பான் முஹம்மத் முஹ்யித்தீன், செய்யித் அஹ்மத் கபீர் ரிஃபாய், ஹாஃபிழ் எம்.என்.புகாரீ மற்றும் பலர் இப்பரிசளிப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
போட்டி நிகழ்வுகள் அனைத்தும் காயல்பட்டினம் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையான ஐ.ஐ.எம். டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தகவல்:
எம்.ஏ.அப்துல் ஜப்பார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம். |