நோன்புப் பெருநாளை முன்னிட்டு, 10.09.2010 அன்று, காயல்பட்டினம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளிவாசலில் காலை 08.30 மணிக்கு பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது.
பள்ளியின் இமாம் அரபி அமானுல்லாஹ் தொழுகையை வழிநடத்தினார். இத்தொழுகையில் பள்ளி தலைவர் கே.அப்துர்ரஹ்மான், செயலாளர் முத்துச்சுடர் ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, துணைச் செயலாளர் கோமான் மீரான் மற்றும் பள்ளி சுற்றுவட்டாரத்திலுள்ள மீனவ முஸ்லிம்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிழற்படம் எடுக்கும் நேரத்தில் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பள்ளிக்கு வந்துகொண்டிருந்த்தாகவும், தொழுகை நேரத்தில் உட்பள்ளியை ஆண்களும், வெளிப்பள்ளியை பெண்களும் முழுமையாக நிரப்பிவிட்டதாக பள்ளி செயலாளர் முத்துச்சுடர் ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை தெரிவித்தார்.
|