சஊதி அரபிய்யா, ரியாத் காஹிர் பைத்துல்மால் அமைப்பின் மலர் வெளியீட்டு நிகழ்ச்சி உள்ளிட்ட முப்பெரும் நிகழ்வுகள் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெற்றது. நிகழ்வுகள் குறித்து அந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
சஊதி அரபிய்யா - ரியாத் காஹிர் பைத்துல் மால் (கே.பி.எம்.) அமைப்பின் 20ஆவது செயற்குழுக் கூட்டம், 41ஆவது பொதுக்குழுக் கூட்டம், மலர் வெளியீடு ஆகிய முப்பெரும் நிகழ்வுகள், 27.08.2010 வெள்ளிக்கிழமை மாலையில், ரியாத் பத்தாவிலுள்ள க்ளாஸிக் பார்ட்டி ஹாலில், அமைப்பின் தலைவர் ஜனாப் எம்.இ.எல்.செய்யித் அஹ்மத் நுஸ்கீ தலைமையில், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் துவங்கியது.
சிறப்பான இஃப்தார் ஏற்பாடுகள் செய்யப்பட்டு திரளாக வருகைபுரிந்த அனைத்து சகோதரர்களும் 17ம் தின நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். தொடர்ந்து மஃரிபு ஜமாஅத் (கூட்டுத் தொழுகை) நடத்தப்பட்டது. ஹாஃபிழ் எம்.ஏ.ஷெய்க் தாவூத் இத்ரீஸ் தொழுகையை வழிநடத்தினார்.
புண்ணியங்கள் பூத்துச்சிரிக்கும் புனித ரமழானின் 18ஆம் இரவில் திருமறைக் குர்ஆனின் தேன் துளிகளிலிருந்து சில வசனங்களை ஜனாப் எஸ்.எம்.பி.செய்யித் முஹம்மத் ஸாலிஹ் அவர்கள் ஓத, வரவேற்புரையுடன் இறையருளால் இனிதே நிகழ்ச்சிகள் துவங்கின.
முன்னிலை வகித்த பெருமக்கள்:-
ஜனாப் எஸ்.எம்.செய்யித் இபுறாஹீம் அவர்கள்,
ஜனாப் கண்டி எம்.ஏ.செய்யித் இஸ்மாயீல் அவர்கள்,
ஜனாப் எல்.எஸ்.செய்யித் அஹ்மத் அவர்கள்,
ஜனாப் என்.டி.பாதுல் அஸ்ஹாப் அவர்கள் (டிசைன்ஸ் பார்க்),
ஜனாப் அப்துல் வஹ்ஹாப் அவர்கள் (லைப்லைன்),
ஜனாப் எம்.எம்.எஸ்.செய்யித் முஹம்மத் அவர்கள்,
ஜனாப் எஸ்.எஸ்.ஷாஹுல் ஹமீத் அவர்கள் (சிங்கப்பூர் பிளாசா),
ஜனாப் என்.டி.ஷெய்க் அப்துல் காதிர் அவர்கள்,
ஜனாப் ஏ.எஸ்.எல்.சுலைமான் லெப்பை அவர்கள்.
எமதமைப்பின் தலைவர் எம்.இ.எல்.செய்யித் அஹ்மத் நுஸ்கீ பி.காம். தலைமையுரையாற்றினார். அவர் தனதுரையில்...
புனித ரமழானில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பத்ரு களம் கண்டு வெற்றி ஈட்டிய 17ஆம் நாளின் இஃப்தார் நிகழ்ச்சியில் எல்லோரும் ஒன்றிணைந்திருப்பது மிகுந்த மகிழ்சியளிக்கிறது.
நமது காஹிர் பைத்துல்மால் ஏழை மக்களின் நல் வாழ்விற்காக பல்வேறு நல உதவிகளை செய்து வருகிறது. மூன்று இஞ்சினியர் ஏழை மாணவர்களுக்கு வருடத்திற்கு ரூபாய் 25,000/- வழங்கி அவர்கள் மேற்படிப்பைத் தொடர துணைநின்று வருகிறது...
ஏழை-எளிய சிறார்களுக்கு நோட்டு புத்தகங்கள், பள்ளி சீருடைகள் வழங்கி அவர்களின் வாழ்வில் கல்வி தீபத்தை ஏற்றிவருகிறது...
நமதூரில் மாணவர்களை விட மாணவிகளே அதிக மதிப்பெண்களை பெற்று முதலிடத்தில் இருக்கின்றனர். மாணவர்களும் போட்டி போட்டு முதலிடத்தைப் பெறவேண்டும்...
நமது காஹிர் பைத்துல்மால் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டு முகாம் ஒன்றினை வெகு சிறப்பாக நடாத்த திட்டமிட்டுள்ளது என்பதனையும் இங்கே குறிப்பிடவிரும்புகிறேன்...
இவ்வாறு அவர் தனதுரையில் தெரிவித்தார்.
பின்னர் சிக்கிம் - மணிப்பால் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ஷாஹுல் ஹமீத் உரையாற்றினார். அவர் தனதுரையில்...
காஹிர் பைத்துல்மால் உறுப்பினர்கள் தேர்தெடுத்திருக்கின்ற பாதை சிறப்பானது. அது தர்மத்தின் பாதை. பொருளாதாரத் தேவைக்காக வந்த நீங்கள், கிடைக்கின்ற சொற்ப நேரத்திலும் எனக்கு என்ன செய்தேன் என சுயநலமாய் சிந்திக்காமல், பிறருக்கு நாம் என்ன செய்தோம் என்று பொதுநலமாய் சிந்தித்து செயல்படும் உங்களை உண்மையிலேயே நான் பாராட்டுகிறேன்... மகிழ்ச்சியடைகிறேன்...
இந்த உயர்வான நிகழ்வுக்கு என்னை அழைத்து கௌரவப்படுத்தியதற்கு நான் நன்றி கூறுகிறேன்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில்கேட்ஸ் நாம் அறிந்த பெயர். அவர் இப்போதுதான் அறிவித்துள்ளார் நான் ஏழை மக்களுக்கு உதவப்போகிறேன் என்று! ஆனால்! You are better then them. பிறருக்கு உதவி செய்வது என்பது நமது உயிரோடு, உடலோடு கலந்தது. அவரைவிட நீங்கள் பண்மடங்கு அல்லாஹ்விடத்திலே உயர்ந்தவர்களாகி விட்டீர்கள். ஏனென்றால் அவர் தனது சொந்த தேவைகளை (Self Actualization) எல்லாம் முடித்துவிட்டு இப்போது அறிவித்துள்ளார். கோடி, கோடி பணம் கொட்டிக் கொண்டிருந்தபோது அந்த சிந்தனையே இல்லை.
ஆனால் திரவியம் தேடவந்த நீங்களோ கிடைக்கின்ற ஊதியத்தில் ஒரு சிறுபங்கையேனும் ஏழை எளிய மக்களுக்கு வழங்க வேண்டுமென தீர்மானித்து செயல்படுவதை எண்ணி நான் பெருமிதம் அடைகிறேன்.
காயல்பட்டினத்தைச் சார்ந்த மக்கள், உலகமெங்கிலும் காயல் நல மன்றமமைத்து நலிந்தோரின் நல் வாழ்விற்கு நல்லுதவிகள் செய்து வருகிறார்கள் என்ற தகவல் என்னை பிரமிக்கச் செய்கிறது.
நாம் எவ்வளவுதான் வறியவர்களுக்கு வழங்கினாலும் அவர்களின் தேவையை நம்மால் பூர்த்தி செய்திட முடியாதுதான்! என்றாலும், தர்மம் செய்வது நமது கடமை என்ற அடிப்படையில் நம்மால் இயன்ற வரை ஏழை மக்களுக்கு வாரி வழங்க வேண்டும். இதுவே இறை நேசத்தைப் பெற்றுத்தரும்.
பெண்கள் கல்வி கற்பது அவசியமானது. அதனை நாம் ஊக்குவிக்க வேண்டும். அது போலவே மாணவர்களின் உயர்கல்வியிலே நாம் அவர்களுக்கு சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கவேண்டும் இதற்காக கேரியர் கைடன்ஸ் (Career Guidance) நடத்தவேண்டும்.
சமுதாயத்திற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனையே அல்லாஹ் நமக்கு வழங்கிய பெரிய நிஃமத் - அருள்!
நாம் செல்லும் Vacationஇல் குறைந்தபட்சம் இரண்டு தினங்கள் மட்டுமேனும் ஒதுக்கி பொதுநல காரியங்களில் ஈடுபடவேண்டும். மாணவர்களை முறையாக வழிநடத்தும் சூழல் இல்லை. அதனை நாம் செய்தாகவேண்டும்.
நம்மிடத்திலே சுயநலம் இருக்கவே கூடாது. நம்மால் பண உதவி மட்டுமே இங்கிருந்து செய்யமுடியும். ஆனால், பணமில்லாமல் உதவிசெய்வது என்பது பணத்தைவிட சக்திமிக்கது.
எப்படி டாக்டர் நோயாளிக்கு நல்ல யோசனைகளைக் கூறி சுகப்படுத்துகிறாறோ அதுபோல, நாம் மாணவ சமுதாயத்திற்கு நல்லாலோசனைகளை வழங்கி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
உலகில் மிகப்பெரிய சொத்து காசா.....? பணமா......? இல்லை.! மிகப்பெரிய சொத்து Knowledgeதான்!
எனவே இறைநேசத்திற்காக செயல்படக்கூடிய Weapons என உங்களை மனதார பாராட்டுகிறேன். இதுதான் எனக்கு கிடைத்த முதல் தமிழ் மேடை என்பதை நான் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்...
ஊரில் சிக்கிம் மணிப்பால் பல்கலைக் கழகத்தில் பயின்று வந்த மாணவர் செமஸ்டர் முடிக்காமல் இடைநிறுத்தம் செய்து இவிடம் பணி நிமிர்த்தம் வந்திருந்தால் அவர் அந்த செமஸ்டரை தொடர்ந்து இவிடம் படித்து முடிப்பதற்கு எவ்வித கட்டணமும் பெறப்படாது...
இவ்வாறு நல்ல தகவலையும், நமதூர் மக்களுக்கு வழங்கி மனோதத்துவ ரீதியிலான தங்களின் உற்சாக உரையை பேராசிரியர் அவர்கள் நிறைவுசெய்தார்கள்.
தொடர்ந்து, மலர் அறிமுகவுரையினை ஜனாப் என்.டி.ஸதக்கத்துல்லாஹ் அவர்கள் வழங்கினார். அவர் தனதுரையில்...
மலர் வெளிவருவதற்கு மலர்க்குழுவினர் எடுத்துக்கொண்ட கடுமையான சிரமங்களை எடுத்துக்கூறியதோடு, இந்த மலர் வெளியிடுவதின் நோக்கம் புகழுக்காகவோ, பெருமைக்காகவோ அல்ல! மாறாக, ஏழை மக்களின் கண்ணீரைத் துடைக்க.... அவர்களின் நல்வாழ்விற்காக நிதிகளைத் திரட்டும் ஒரு கருவியாகத்தான் இந்த மலரினை வெளியிடுகிறோம்... என்று குறிப்பிட்தோடு, அதில் இடம்பெற்றுள்ள அரிய கருத்துக்களில் இருந்து சில விடயங்களையும் மேற்கோள் காட்டிப் பேசினார்.
ஒருவர் எவ்வளவுதான் உயர உயர கற்றிருந்தாலும் அவரிடத்திலே ஒழுக்கமில்லாது போனால் அவர் கற்ற அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராகிவிடும் என்றும், ஒழுக்கமில்லாதவன் செத்த பிணத்திற்கு ஈடானவன் என்றும் கூறி ஒழுக்கத்தின் மாண்புகளை வலியுறுத்திப் பேசினார்.
மலர் வெளிவருவதற்காக அரும்பணியாற்றிய - அதற்கு விளம்பரங்கள் வாழ்த்துக்கள் வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் கூறி தனது உரையை முடித்துக்கொண்டார்.
மலர் வெளியீட்டு நிகழ்வு:
முதல் மலரினை டாக்டர் பேராசிரியர் ஷாஹுல் ஹமீது அவர்கள் வழங்க சிங்கப்பூர் பிளாசா (ரியாத்) உரிமையாளர் அல்ஹாஜ் எஸ்.எஸ்.ஷாகுல் ஹமீது அவர்கள் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து காயல் பைத்துல்மாலின் செயற்குழு மூத்த உறுப்பினர் அல்ஹாஜ் என்.டி.ஷெய்க் அப்துல் காதிர் அவர்கள், டாக்டர் அவர்களுக்கு மலரினை வழங்கி சிறப்பு செய்தார்கள்.
இறுதியாக இறைப்பிரார்த்தனையோடு கண்மணி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துக்கள் ஓதப்பட்டு, இறையருளால் நிகழ்ச்சிகள் யாவும் இனிதாய் நிறைவுற்றது, அல்ஹம்துல்லாஹ்!
அன்பின் காஹிர் பைத்துல்மாலின் உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள், அபிமானிகள் அனைவருக்கம் இதயம் நிறைந்த இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்!!!
சிறப்புமிக்க இந்நிகழ்ச்சிகள் அனைத்திலும், எமது அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |