நோன்புப் பெருநாளை முன்னிட்டு, 10.09.2010 அன்று, ஹாங்காங்வாழ் காயலர்கள் ஒருங்கிணைந்து, தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். முன்னதாக, ஹாங்காங் கவ்லூன் பெரிய பள்ளியில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
மூன்று முறை தனித்தனியே நடைபெறும் பெருநாள் தொழுகையின் மூன்றாவது தொழுகை மற்றும் குத்பா பேருரையை கம்பல்பக்ஷ் ஹாஜி எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப் நடத்தினார்.
பின்னர், பள்ளிவாசலின் வெளிப்பகுதியில் ஒன்றுகூடிய காயலர்கள் முஸாஃபஹா செய்து (கட்டித்தழுவி) தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - குத்பா பெரிய பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் உட்பட பெருந்திரளானோர் இத்தொழுகையில் கலந்துகொண்டனர்.
படங்கள்:
அப்துல் காதிர்,
ஹாங்காங். |