நோன்புப் பெருநாளை முன்னிட்டு, 10.09.2010 அன்று, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியில் பெருநாள் தொழுகையும், அதனைத் தொடர்ந்து குத்பா பேருரையும் நடத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காழீயும், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் துணை முதல்வரும், குத்பா பெரிய பள்ளியின் கத்தீபுமான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ தொழுகையை வழிநடத்தி, குத்பா உரையாற்றினார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, காயல்பட்டினத்தின் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகை மட்டுமே நடத்தப்படுவதும், குத்பா பேருரை இரண்டு ஜும்ஆ பள்ளிகளில் மட்டுமே நடத்தப்படுவதும் வழமையாக இருந்தது.
பொதுமக்கள் வசதியைக் கருதி பெருநாள் தொழுகை காலை 08.30 மணி முதல் 10.30 மணி வரை நடத்தப்படுவதால், அதற்குப் பிறகு அனைத்துப் பள்ளிவாசல் ஜமாஅத்தைச் சார்ந்தவர்களும் குத்பா நடைபெறும் ஜும்ஆ பள்ளிகளுக்குச் சென்று குத்பாவில் கலந்துகொள்வதில் ஏற்பட்ட சிரமத்தையும், பலர் குத்பாவில் கலந்துகொள்ளாமலேயே தம் இல்லங்களுக்குச் சென்றுவிடுவதைக் கருத்தில் கொண்டும், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி, ஆறாம்பள்ளி உள்ளிட்ட பல பள்ளிவாசல்களில் சில ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து அந்தந்த பள்ளியிலேயே தொழுகையும், குத்பா உரையும் நடத்தப்பட்டு வருகிறது.
என்றாலும், இன்றளவும் நகரின் பல பள்ளிவாசல்களிலிருந்து, குத்பா உரையைக் கவனிப்பதற்காக ஜமாஅத்தினர் ஜும்ஆ பள்ளிகளை நோக்கி வரும் வழமையைக் கொண்டுள்ளனர்.
அந்த அடிப்படையில், பெரிய குத்பா பள்ளிவாசலில் குத்பா உரையைக் கவனிப்பதற்காக காத்திருந்த பொதுமக்களில் ஒரு பகுதியினர்:-
|