நோன்புப் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் சார்பில், காலை 07.30 மணிக்கு காயல்பட்டினம் கடற்கரையில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது.
இதில் 2500க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் நெய்னா முஹம்மது தொழவைக்க, பள்ளி கத்தீப் அப்துல் மஜீத் மஹ்லரி குத்பா பேருரை நிகழ்த்தினார். தொழுகை கிடைக்கபெறாதவர்க்கு உடனடியாக இரண்டாவது ஜமாத் நடத்தப்பட்டது.
ஐ.ஐ.எம். பைத்துல்மால் நிதிக்காக ஆண்கள் பகுதியிலிருந்து ரூபாய் 57,000மும், பெண்கள் பகுதியிலிருந்து ரூபாய் 60,000 மற்றும் 8 கிராம் தங்க காசு உட்பட தங்க, வெள்ளி ஆபரணங்களும் வசூலானது.
தகவல்:
எம்.ஏ. அப்துல் ஜப்பார்,
கொச்சியார் தெரு.
|