நாளை நோன்புப் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் உலக காயலர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பேரவை தலைவர் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்பார்ந்த காயலர்களுக்கு எங்கள் அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும். இறையருளால் இம்மடல் தங்கள் யாவரையும் பூரண உடல் நலமுடனும், நல்வளமுடனும், உயரிய இஸ்லாமிய உணர்வுகளுடனும் சந்திக்கட்டுமாக...
இறையருளால், கடந்த புனிதமிக்க ரமழான் மாதத்தில் 29 நோன்புகளைப் பூர்த்தி செய்து, நாளை பெருநாளைக் கொண்டாடவிருக்கிறோம்.
இந்த நல்ல தருணத்தில், எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில், உங்கள் யாவருக்கும் “ஈத் முபாரக்” என்று இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறோம்.
நம்மை விட்டும் சென்றுவிட்ட புனித ரமழான் மாதத்தில் நாம் செய்த அனைத்து நற்செயல்களையும் கிருபையுள்ள அல்லாஹ் அங்கீகரித்து, அவனது ஈடினையில்லாத நல்லருளையும், இறைத்தூதர் நம் உயிரினுமினிய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்த பரிந்துரையையும் நமக்கு நல்கியருள்வானாக, ஆமீன்!
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். |