ரமழான் மாதத்தின் கடைசி தினங்களில், காயல்பட்டினம் நகரின் பெரும்பாலான பள்ளிகளில் ஸஹர் விருந்து ஏற்பாடு செய்யப்படும் வழமை பல்லாண்டு காலமாக உள்ளது.
ரமழான் இரவு தராவீஹ் தொழுகையில் திருமறை குர்ஆனை முழுமையாக ஓதி முடித்த பிறகு, தமாம் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து இந்த ஸஹர் விருந்து நடத்தப்படுவதால் இதற்கு தமாம் சாப்பாடு என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது.
இன்று அதிகாலை, ரமழான் 29ஆம் நாளை முன்னிட்டு, காயல்பட்டினம் சிறிய குத்பா பள்ளி, பெரிய குத்பா பள்ளி, அஹ்மத் நெய்னார் பள்ளி மற்றும் குருவித்துறைப் பள்ளி சார்பில் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை ஆகிய இடங்களில் தமாம் விருந்து நடைபெற்றது. விருந்து காட்சிகள் பின்வருமாறு:-
அஹ்மத் நெய்னார் பள்ளியில்...
பெரிய குத்பா பள்ளியில்...
சிறிய குத்பா பள்ளியில்...
|