வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்டத்திலுள்ள 1000 ஏழை பொதுமக்களுக்கு வேஷ்டி – சேலைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
காயல்பட்டினத்திலுள்ள 250 ஏழை பொதுமக்களுக்கு நேற்று (08.09.2010) மாலை 5 மணிக்கு இந்த இலவச புத்தாடைகள் வழங்கப்பட்டது.
காயல்பட்டினம் பிரதான வீதி - கிப்ஸ் அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான எளிய நிகழ்ச்சிக்கு நகர முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர் தலைமை தாங்கினார்.
மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன் ஏழைகளுக்கு புத்தாடைகளை வழங்கினார்.
முஸ்லிம் லீக் மூத்த உறுப்பினர்களான ஹாஜி வாவு அப்துல் கஃப்ஃபார், ஹாஜி ஜெஸ்மின் கலீல், நகர செயலாளர் ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், மாவட்ட நிர்வாகிகள் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், எம்.எச்.அப்துல் வாஹித், நகர துணைச் செயலாளர்கள் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், துளிர் எம்.எல்.ஷேக்னாலெப்பை, மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
காயல்பட்டினத்திலுள்ள தனவந்தர்கள் உட்பட மாவட்டம் முழுவதிலிருந்தும் பலர் இதற்காக அனுசரணை செய்திருந்தனர். |