ஹாங்காங்கில் 29 நோன்புகள் பூர்த்தியான நிலையில், இன்றிரவு பெருநாள் இரவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலையில் ஹாங்காங் கவ்லூன் பள்ளியில் நடைபெறும் பெருநாள் தொழுகையில் காயலர்கள் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம்களும் பங்கேற்கவுள்ளனர்.
பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பேரவைச் செயலர் யு.ஷேக்னா வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை பின்வருமாறு:-
அன்பார்ந்த ஹாங்காங்வாழ் காயலர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். ஹாங்காங்கில் பெருநாள் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நாளை (10.09.2010) பெருநாள் தினத்தன்று மஃரிப் தொழுகைக்குப் பின் இரவு 7 மணிக்கு ஹாங்காங் சிந்தி பார்க் பூங்காவில் நமது பேரவை சார்பில் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒன்றுகூடலின்போது, அனைவருக்கும் எளிய சிற்றுண்டி ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
குறுகிய கால சூழலிலேயே இந்த அறிவிப்பு வெளியிட வேண்டிய நிலையுள்ளதால், காயலர்கள் அனைவரும் தமது குடும்பத்துடன் கலந்துகொள்ளுமாறு நமது பேரவை சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். |