காயல்பட்டினம் புதுப்பள்ளி நிர்வாகம் சார்பில், நேற்று மாலை ஜமாஅத்தினருக்கு தமாம் நேர்ச்சை வினியோகிக்கப்பட்டது.
ரமழான் மாதம் முழுவதும் இரவில் இஷா தொழுகைக்குப் பின் நடத்தப்படும் தராவீஹ் தொழுகையின்போது, நகரின் பெரும்பாலான பள்ளிகளில் திருமறை குர்ஆனின் முழு வசனங்களும் ஒரு மாத காலத்தில் ஓதப்படுகிறது. கடைசி நாளன்று அந்த ஓதல் நிறைவு செய்யப்படும். இதனை தமாம் செய்தல் என்று சொல்வர்.
அந்த அடிப்படையில் நேற்று இரவு காயல்பட்டினம் புதுப்பள்ளிவாசலில் திருமறை குர்ஆனைப் பூர்த்தி செய்து, தமாம் செய்யப்பட்டது. இந்நிகழ்வையொட்டி, அன்று மாலை, பள்ளி நிர்வாகத்தின் சார்பில், ரிஸ்வான் சங்க வளாகத்தில் நேர்ச்சை சமைக்கப்பட்டு, பெட்டியில் அடைத்து, புதுப்பள்ளி மற்றும் புதுப்பள்ளி நிர்வாகத்தின் கீழுள்ள ஷெய்கு ஸலாஹுத்தீன் பள்ளி (மேலப்பள்ளி) ஆகிய ஜமாஅத்துகளைச் சார்ந்த குடும்பத்தினருக்கு வினியோகிக்கப்பட்டது.
பள்ளி பொருளாளர் ஹாஜி அஷ்ரஃப் தலைமையில் நடைபெற்ற இந்த வினியோகத்தில், பள்ளி செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். |