எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் காயல்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், நகரிலுள்ள ஏழைப் பெண்களுக்கு சேலை, அரிசி ஆகிய உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் சபை வெளி வளாகத்தில், நேற்று (08.09.2010) காலை 10 மணிக்கு, நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமை தாங்கினார்.
காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எம்.ஏ.கஸ்ஸாலி மரைக்காயர், கே.எம்.டி. மருத்துவமனை தலைவர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, குருவித்துறைப் பள்ளி செயலாளர் ஹாஜி எஸ்.எம்.கபீர், கம்பல்பக்ஷ் ஹாஜி என்.எஸ்.நூஹ் ஹமீத், காயல்பட்டினம் அரிமா சங்க தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.சதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, கே.எம்.டி. மருத்துவமனை செயலாளர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர்,
இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டி.எம்.), புதுப்பள்ளிவாசல் தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர், இக்ராஃ கல்விச் சங்க செயற்குழு உறுப்பினர் ஹாஜி ஏ.கே.கலீல், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, ஹாஜி ராவன்னா அபுல் ஹஸன், ஹாஜி எஸ்.ஏ.பீர் முஹம்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துவக்கமாக, ஹாஃபிழ் ஜே.எம்.ஷேக் அப்துல் காதிர் கிராஅத் ஓதினார். ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ சாவன்னா பாதுல் அஷ்ஹப் ஃபாஸீ சிறப்புரையாற்றினார். காயல்பட்டினம் முஸ்லிம் மகளிர் உதவும் சங்க அமைப்பாளர் ஹாஜ்ஜா அ.வஹீதா அறிமுகவுரையாற்றினார்.
பின்னர், நகரிலுள்ள சுமார் 600 ஏழைப் பெண்களுக்கு, எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம், காயல்பட்டினம் அரிமா சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் இலவச சேலை, அரிசி அடங்கிய பொதி வழங்கப்பட்டது. அவற்றை, மேடையில் அமர்ந்திருந்த நகரப் பிரமுகர்கள் தமது கரங்களால் வழங்கினர்.
தாருத்திப்யான் நெட்வொர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
நிகழ்ச்சிகளை வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி செயலர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம் தொகுத்து வழங்கினார்.
|