இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, ஏழைகளுக்கு ஃபித்ரா அரிசி வழங்கப்பட்டது.
நோன்புப் பெருநாளன்று உணவின்றி ஒரு முஸ்லிமும் இருக்கக்கூடாது என்ற இஸ்லாமிய மார்க்கத் தத்துவத்தின் அடிப்படையில், பொதுமக்களின் ஃபித்ரா தர்மப் பொருட்களைச் சேகரித்து, ஒருங்கிணைந்த முறையில் சமுதாய அமைப்புகள் சுற்றுவட்டாரத்திலுள்ள ஏழை-எளிய மக்களுக்கு வழங்குவது வழமை.
அந்த அடிப்படையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளிவாசல் அருகில், இன்று மாலை 5 மணிக்கு ஏழை மக்களுக்கு ஃபித்ரா இலவச அரிசி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, நகர முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், நிர்வாகிகள் ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், ஹாஜி மொகுதூம் கண்சாஹிப், ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், எம்.எச்.அப்துல் வாஹித், மஹ்மூத் லெப்பை, கே.எம்.டி.சுலைமான் மற்றும் பலர் ஏழைகளுக்கு அரிசிகளை வழங்கினர்.
|