இந்தியா முழுவதும் பொதுத்துறை வங்கிகள், பழம்பெரும் தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகளை சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் நாளை ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இந்தப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 40,000 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
ஆனால், ஸ்டேட் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். அதே போல புதிய தனியார் வங்கிகளும் போராட்டத்தில் ஈடுபடப் போவதி்ல்லை.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது, வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது, தாராளமயமான கொள்கைகள் கூடாது, வங்கி நிரந்தர பணிகளை ஒப்பந்த முறையில் நியமிக்கக் கூடாது போன்ற கோரிக்கைககளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது.
|