நடப்பாண்டு புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, சிங்கப்பூரிலுள்ள காயலர்கள் கலந்துகொண்ட நிலையிரவுத் தொழுகை (கியாமுல் லைல்) ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் இல்லத்தில் நடைபெற்றது.
துவக்கமாக அனைவராலும் கத்முல் குர்ஆன் ஓதப்பட்டது. மேலப்பாளையத்தைச் சார்ந்த மவ்லவீ முஹம்மத் அலீ துஆ ஓதி அந்த அமர்வை நிறைவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, லைலத்துல் கத்ரின் முக்கியத்துவம், அதனை முன்னிட்டு செய்யப்பட வேண்டிய நற்செயல்கள் குறித்து சிங்கை மஸ்ஜித் ஜாமிஆ சுலியாவின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ உரையாற்றினார்.
பின்னர், குடும்ப உறவுகளைப் பேண வேண்டியதன் அவசியம் குறித்து, சிங்கை மஸ்ஜித் அப்துல் கஃபூர் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் உமர் ரிழ்வானுல்லாஹ் ஜமாலீ உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, மனைவிக்கு கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ற தலைப்பல் சிங்கை மஸ்ஜித் பெங்கூலன் இமாம் மவ்லவீ அப்துல் கய்யூம் பாக்கவீ உரையாற்றினார்.
உரைகளைத் தொடர்ந்து கியாமுல் லைல் - நிலையிரவுத் தொழுகை துவங்கியது.
ஹாஃபிழ் செய்யித் அஹ்மத்,
எஸ்.டி.செய்யித் முஹ்யித்தீன்,
பாளையம் முஹம்மத் அப்துல் காதிர்,
ஹாஃபிழ் ஷெய்க் அப்துல் காதிர் ஸூஃபீ
ஆகியோர் இத்தொழுகையை அடுத்தடுத்து வழிநடத்தினர்.
நிலையிரவுத் தொழுகையைத் தொடர்ந்து தஸ்பீஹ் தொழுகை நடத்தப்பட்டது. ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அதனை வழிநடத்தினார். பின்னர் வித்ர் தொழுகையை ஹாஃபிழ் செய்யித் அஹ்மத் நடத்தினார்.
அனைத்துத் தொழுகைகளும் நிறைவுற்ற பின்னர், சிங்கை மஸ்ஜித் அப்துல் கஃபூர் இமாமும், அங்குள்ள மத்ரஸாவின் ஆசிரியருமான மவ்லவீ நஹ்வீ ஏ.எம்.முஹம்மத் இப்றாஹீம் சிறப்பு துஆ ஓதினார்.
பின்னர் அனைவருக்கும் ஸஹர் உணவு பரிமாறப்பட்டது. ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் அனைவரும் கலைந்து சென்றனர்.
நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் நன்றி தெரிவித்தார். இரவு 11.30 மணிக்குத் துவங்கிய இந்நிகழ்ச்சி அதிகாலை 06.00 மணிக்கு நிறைவுற்றது.
தகவல்:
எம்.எம்.மொகுதூம் முஹம்மத்,
சிங்கப்பூர். |