நடப்பாண்டு ரமழானை முன்னிட்டு, லால்பேட்டை அபூதபீ ஜமாஅத் சார்பில் லைலத்துல் கத்ர் இரவு சிறப்பு நிகழ்ச்சி, ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காலிதியா ஷெரட்டன் ஹோட்டல் பின்புறமுள்ள மஸ்ஜித் அபூ உபைதாவில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அபூதபீ லால்பேட்டை ஜமாஅத் தலைவர் ஏ.ஆர்.இஸ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். செயற்க்குழு உறுப்பினர் மெளலவி ஏ.அமீனுல் ஹுஸைன் மன்பஈ கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
அபூதபீ லால்பேட்டை ஜமாஅத் செயளாலர் ஏ.எஸ்.அப்துர்ரஹ்மான் வரவேற்றுப் பேசினார். குர்ஆனின் மகத்துவத்தைப் பற்றி மெளலவி .ஹபீபுல்லாஹ் மன்பஈ உரையாற்றினார். ஹாபிழ் ஆர்.இசட்.எம்.இர்ஷாத் அஹ்மத் தஸ்பீஹ் சிறப்பு தொழுகை நடத்தினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காயல்பட்டினம் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ, லைலத்துல் கத்ர் மகத்துவத்தைப் பற்றி விரிவாக உறையாற்றியதோடு, இறுதியில் சிறப்பு துஆ ஓதினார்.
நிறைவாக, ஜமாஅத் துணைத்தலைவர் எஸ்.அப்துல் அஜீது நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட லால்பேட்டை, கொள்ளுமேடு, மானியம் ஆடூர், ஆயங்குடி, சிதம்பரம், காரைக்கால், பரங்கிப்பேட்டை, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பொதுமக்களும், இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சார்ந்த பொதுமக்களும் என சுமார் 350 பேர் பங்கேற்றனர். அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஜமாஅத் பொருளாளர் ஹெ.எம்.பழ்லுர்ரஹ்மான், துணைச்செயளாலர் ஹெச்.ஜாக்கிர் ஹுஸைன், செயற்க்குழு உறுப்பினர்கள் பி.ஹெச்.முஹம்மது ஆதம், ஏ.எம்.தமீஜுல்லாஹ், கெளரவத் தலைவர் எம்.சுஐபுத்தீன், துணைப் பொருளாளர் எம்.ஹபீபுல்லாஹ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் தாயகத்தில் இருந்தால் எந்த மகிழ்ச்சி இருக்குமோ அதே அளவில் மன நிறைவுடன் இருந்ததாகக் குறிப்பிட்டனர்.
தகவல்:
அபூதபீ லால்பேட்டை ஜமாஅத் சார்பில்
இப்னு ஷஃபீக்
படங்கள்:
எச்.நஜீர் அஹ்மத்,
அபூதபீ, ஐக்கிய அரபு அமீரகம். |