காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் ஆண்டுதோறும் ரமழான் மாதத்தின் கடைசி ஐந்து தினங்களில் ஏதேனும் ஒரு நாளில் சிறப்பு நிலையிரவுத் தொழுகை (கியாமுல் லைல்) நடத்தப்படுவது வழமை.
நடப்பாண்டு, நேற்றிரவு (07.09.2010) 11 மணிக்கு சிறப்பு நிலையிரவுத் தொழுகை பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது. இத்தொழுகையை பள்ளியின் முன்னாள் - இந்நாள் மாணவர்கள் தனித்தனி குழுவினராக வெவ்வேறு வகுப்பறைகளில் நடத்தினர்.
இத்தொழுகையில், பள்ளி நிர்வாகிகளான ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர், ஹாஜி எம்.எல்.மூஸா நெய்னா, ஹாஜி முஹ்யித்தீன் தம்பி, ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் கய்யூம், துளிர் எம்.எல்.ஷேக்னாலெப்பை உள்ளிட்டோரும், பள்ளியின் முன்னாள் - இந்நாள் மாணவர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
தொழுகையை வழிநடத்திய மாணவர்கள் அனைவருக்கும், தொழுகை நிறைவுற்ற பின் பள்ளி நிர்வாகிகளால் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இச்சிறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் டி.ஸ்டீஃபன், மேலாளர் கே.எம்.டி.சுலைமான், அரபி ஆசிரியர் மவ்லவீ மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் ஏ.முஹம்மத்,
முன்னாள் மாணவர்,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி,
காயல்பட்டினம். |