காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி YUF சார்பில், புனித ரமழான் 27ஆம் நாள் இரவை முன்னிட்டு இன்று அதிகாலை (நள்ளிரவு) சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
00.15 மணிக்கு, கிராஅத்தைத் தொடர்ந்து, ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸுடன் நிகழ்ச்சி துவங்கியது. காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் ஹாஃபிழ் செய்யித் அஹ்மத் முத்துவாப்பா தலைமை தாங்கினார். காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளியின் இமாம் ஹாஜி டி.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத், இளைஞர் ஐக்கிய முன்னணியின் முன்னாள் தலைவர் எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டி.எம்.), இந்நாள் தலைவர் எம்.எம்.முஹம்மத் இஸ்மாயீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திக்ர் மஜ்லிஸைத் தொடர்ந்து, லைலத்துல் கத்ர் இரவின் மகத்துவம் குறித்து ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ சிறப்புரையாற்றினார்.
நிறைவாக, இளைஞர் ஐக்கிய முன்னணியின் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் நன்றி கூற, காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளியின் இமாம் எம்.எல்.முஹம்மத் அலீ ஆலிமின் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
நிகழ்ச்சியில், காயல்பட்டினம் கிழக்குப் பகுதி மக்கள் உட்பட அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஹாஜி சொளுக்கு ஏ.ஜே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஹாஃபிழ் எம்.ஏ.சி.ஈஸா ஷஃபீக், ஹாஜி சொளுக்கு எஸ்.எம்.ஐ.செய்யித் முஹம்மத் ஸாஹிப், பெத்தப்பா நூஹ், சாவன்னா ஷாஹுல் ஹமீத் உள்ளிட்ட இளைஞர் ஐக்கிய முன்னணியின் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
தகவல்:
ஹாஃபிழ் மன்னர் செய்யித் அப்துர்ரஹ்மான்,
சொளுக்கார் தெரு, காயல்பட்டினம். |